தமிழ் சினிமாவில் ஆழமாக காலூன்றிய அஜீத்துக்கும், முந்தாநாள் கால் பதித்த கார்த்திக்கும் போட்டி என்ற போடு கோடம்பாக்கம் கொஞ்சம் அதிர்ந்துதான் போனது. இது ஆணவம் அன்றி வேறென்ன?
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் இந்த சகுனியாட்டத்தின் ஒரு பகுதியாக பில்லா 2-வை விட சகுனி அதிக விலைக்கு விற்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டது. அடுத்து ரிலீஸ் தேதி. சென்சார் காரணமாக பில்லா 2 பின்வாங்க கெத்தாக, மாமா ரெடியா என்று சவால்விட்டார்கள். மேலும் 1,500 திரையரங்குகளில் சகுனி வெளியாவதாகவும் பில்டப் செய்யப்பட்டது.
மேலே சொன்ன அதிரடியால் கலங்கிப் போன பில்லா டீம் சகுனி சுமார்தான் என்ற ரிசல்டால் தெம்பாகியிருக்கிறது. சகுனியின் சறுக்கள் பில்லாவுக்கு நக்கல் ஜூலை 13 படம் ரிலீஸ் என கன்ஃபார்ம் செய்திருப்பவர்கள் சகுனியை சதாய்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். சகுனி 1,150 திரையரங்குகளில் வெளியானால் பில்லா 2 வை 1,200 திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகா என் தென்னிந்தியா முழுக்க டேவிட் பில்லா - தி பிகினிங் என்ற பெயரில் படத்தை வெளியிடுகிறார்கள். வட இந்தியாவிலும் இதே பெயரில் வெளியாகிறது.
பிரான்சில் 10 தியேட்டர்களில் ஃபிரெஞச் சப் டைட்டிலுடன் வெளியிடுகிறார்கள். இதேபோல் மலேசியாவில் மலேய மொழியிலும், அரபு நாடுகளில் அரபு சப் டைட்டிலுடனும் மற்ற வெளிறாடுகளில் ஆங்கில சப் டைட்டிலுடனும் வெளியிடுகிறார்கள்.
எப்படியும் சகுனியை முந்த வேண்டும் என்பதே டார்கெட். சபாஷ் சரியான போட்டி... ரொம்ப நல்லாயிருக்கு.
கொசுறு தகவல் - அகதியாக வந்து பெரிய டானாக மாறும் அல்பசினோவின் ஸ்கார் பேஸ் படத்தின் தழுவலே பில்லா 2 என்கிறார்கள். உண்மையா சக்ரி டோலட்டி?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.