மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கோச்சடையான் படத்தின் அடிப்படை கதை.

கோச்சடையான் படத்தின் கதை என்ன? மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு ஏகதேசமாக ஒரு பதில் கிடைத்திருக்கிறது.

ஜென்மங்களாக தொடரும் பகையும் வழிவாங்கலும்தான் இப்போது பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைக்கின்றன. உதாரணமாக ராஜ மௌலியின் மஹாதீரா. இவ‌ரின் புதிய படம் நான் ஈ-யும் ஜென்மங்களை கடந்து துரத்தும் பகை கதைதான்.

கோச்சடையானும் இதே ஃப்ளேவ‌ரில்தான் உருவாகியிருக்கிறது. ர‌ஜினியும், ஜாக்கி ஷெராஃபும் அரசர்கள். இருவருக்கும் இடையில் கடும் சண்டை. அந்தச் சண்டை அப்படியே அடுத்த ஜெனரேஷனுக்கு வருகிறது. இப்போது அரசர் ர‌ஜினியின் மகனுக்கும் ஜாக்கியின் மகன் ஆதிக்கும் மோதல். இதில் அரசர் ர‌ஜினியின் மகனாகவும் ர‌ஜினியே நடித்துள்ளார். ஆதியை ர‌ஜினி எப்படி வெற்றி கொள்கிறார் என்பது கதை.

லண்டன், திருவனந்தபுரம், சென்னை, ஹாங்காங் என பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.