பில்லா 2 வெளியாகும் அன்றுதான் சகுனியை வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு பிடிவாதம். ஏற்கனவே படம் விற்றுவிட்டதால் அவருக்கு இது ரிஸ்க் இல்லாத விளையாட்டு. ஆனால் மற்றவர்களுக்கு?
பெரிய படங்கள் ஒரே தேதியில் வெளியாவதை தயாரிப்பாளர்கள் சங்கம் கஷ்டப்பட்டு தடுத்து வந்தது. லாபம் உடைந்து சிதறாமல் இருக்கதான் இந்த ஏற்பாடு.
இப்போது தயாரிப்பாளர்கள் சங்கமே உடைந்து போயிருக்கும் நிலையில் ஞானவேல்ராஜா தன்னிச்சையாக மேற்படி ரூலை மீறியிருக்கிறார். பில்லா 2 வெளியாகும் ஜுன் 22 தான் சகுனியும் வெளியாகிறது. கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டால் ஊருக்கு நல்லது.
சகுனி படம் சென்ற வாரம் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்திருக்கிறார்கள்.
சகுனி இங்கு வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.