தாண்டவம் படத்தை சிவதாண்டவம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்திருந்தனர். இந்த மொழிமாற்ற உரிமையை கல்யாண் என்பவர் வாங்கியிருந்தார்.
ஆந்திராவில் மொழிமாற்றப் படங்களுக்கு 30 சதவீதம் வரி உண்டு. இதனால் சிவதாண்டவம் நேரடித் தெலுங்குப் படம், தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் எடுத்தது என்று கல்யாண் தரப்பு சான்றிதழ் பெற முனைந்தது. இதனை அங்குள்ள தயாரிப்பாளர்கள் எதிர்த்தனர். இதன் காரணமாக தாண்டவத்துடன் - செப்டம்பர் 28 வெளியாவதாக இருந்த சிவதாண்டவத்தின் வெளியீடு தள்ளிப் போனது.
பிரச்சனைகள் ஓரளவு தணிந்துள்ள நிலையில் அக்டோபர் 5 ஆம் தேதி படத்தை வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.