4. பீட்சா
அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்த பீட்சா சென்ற வார இறுதியில் 3.4 லட்சங்களையும், வார நாட்களில் 2.7 லட்சங்களையும் வசூலித்துள்ளது. ஐந்து வாரங்கள் முடிவில் இதன் சென்னை வசூல் மட்டும் 4.13 கோடிகள்.
3. அம்மாவின் கைப்பேசி
சென்ற வாரம் 13ஆம் தேதி வெளியான தங்கர்பச்சானின் அம்மாவின் கைப்பேசி ஞாயிற்றுக்கிழமை வரை 12.6 லட்சங்களை வசூலித்துள்ளது. இது சராசரிக்கும் கீழான வசூல். படம் ரசிகர்களை கவராத நிலையில் அடுத்த வாரமே இப்படம் பாக்ஸ் ஆஃபிஸின் டாப் 5-லிருந்து விலகும் வாய்ப்புள்ளது.
2. போடா போடி
தீபாவளி தினத்தில் வெளியான போடா போடி நன்றாக இருக்கு, பரவாயில்லை என கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. 13ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை ஆறு தினங்களில் 1.4 கோடியை இப்படம் வசூலித்துள்ளது.
1. துப்பாக்கி
அனைவரும் எதிர்பார்த்தது போல முதலிடத்தில் துப்பாக்கி போடா போடியைப் போல முதல் ஆறு தினங்களில் இப்படத்தின் வசூல் 4.8 கோடிகள். இந்த வருடத்தின் அமர்க்களமான ஓபனிங் துப்பாக்கிக்குதான் என்பதை இந்த வசூல் தெரிவிக்கிறது. விஜய் நடித்த எந்தப் படமும் சென்னையில் 10 கோடியை எட்டியது இல்லை. அதனை துப்பாக்கி சாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.