நீதானே என் பொன்வசந்தம் இருவிதமான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் எப்படியிருப்பினும் இளையராஜாவின் இசையை கௌதம் பயன்படுத்தியதும், சமந்தாவின் நடிப்பை வெளிக்கொணர்ந்ததும் இந்தப் படத்தின் முக்கியமான அம்சங்கள். படம் குறித்தும் இளையராஜா குறித்தும் பிரஸ்மீட்டில் கௌதமின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சு உங்களுக்காக.
நீதானே என் பொன்வசந்தத்தின் கதை.
இந்தக் கதை ஆக்சுவலி போட்டானோட (கௌதமின் தாயாரிப்பு நிறுவனம்) கதை. என்னோட பார்ட்னர் ரேஷ்மா எழுதின கதை. நான் இப்படி ஒரு கதை எழுதியிருக்கேன் பண்ணலாமான்னு அவங்க கேட்டப்ப அவங்க சொன்ன கதையை தெலுங்கு ரைட்டர் கோனா வெங்கட் கிட்ட சொன்னேன். அவர் ரொம்ப எக்ஸ்ட்ராடினரியா ரியாக்ட் பண்ணுனார். அப்புறமா உட்கார்ந்து பேசி வருண், நித்யாங்கிற இரண்டு பேரோட எட்டு வயசிலயிருந்து 25 வயசு வரைக்கும் என்ன நடக்குங்கிறதுதான் கதைன்னு முடிவு பண்ணினோம்.
ஜீவா.
கோ படம் முடிச்சதும் ஜீவா எனக்கு ஃபோன் பண்ணினார். பிரதர் உங்ககூட ஒரு படம் பண்ணணும்னு சொன்னார். சரி லோக்கலா ஒரு படம் பண்ணலாம்னு சொன்னேன். அதுக்கு அவர், இல்ல... பிரதர் நான் உங்கிட்ட வந்ததே urban சப்ஜெக்ட்ல ஒரு படம் பண்றதுக்காகதான்னு சொன்னார். சரி இந்தமுறையும் என்னோட ரூட்லயே பண்றேன்னு இந்தக் கதையை சொன்னேன். சொலிலி முடிச்சதும் என்னோட லைஃப்ல நடந்தது மாதிரியே இருக்குன்னு சொன்னார்.
ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இரண்டு ஹீரோக்களை வைத்து எடுத்தது.
ஜீவாவோட வொர்க் பண்ணுனது பியூட்டிஃபுல் எக்ஸ்பீரியன்ஸ். இந்தப் படத்தை இரண்டு மொழியில் இரண்டு ஹீரோக்களை வச்சு எடுத்தோம். தெலுங்கில் நானி. இரண்டு பேரும் ஸ்பாட்டுக்கு வந்திடுவாங்க. நானியோட ஷாட் போய்கிட்டிருக்கும் போது ஜீவா வெயிட் பண்ணுவார். அது ஹாஃப் அன் அவர் ஆகலாம் ஒன் அவர் ஆகலாம். அதேமாதிரி ஜீவாவோட ஷூட் போய்கிட்டிருக்கும் போது நானி வெயிட் பண்ணுவார். நானியை வச்சு எடுக்கிற ஷாட்டை ஜீவாகிட்ட சொல்ல மாட்டேன். சீனை பற்றி மட்டும் சொல்வேன். அவர் நடிப்பார். இதனால ஒரே சிச்சுவேஷனுக்கு இரண்டு நடிகர்கள் எப்படி நடிப்பாங்கங்கிற எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு கிடைச்சது. இது எனக்குப் பெரிய லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸாக இருந்தது.
சமந்தா.
சமந்தாவை தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நான்தான் அறிமுகப்படுத்தினேன். ஆனா இந்தப் படத்தைதான் அவங்களோட முதல் படம்னு சொல்வேன். அந்தளவுக்கு நடிச்சிருக்காங்க. An actress has arrived-னு தைரியமா சொல்வேன்.
இளையராஜா.
வருண், நித்யா இரண்டு பேரோட கதையை சொல்றதுன்னுதான் இந்த படத்தை ஸ்டார்ட் பண்ணுனேன். அப்புறம் ஜீவாவும், சமந்தாவும் உள்ளே வந்தாங்க. 25 டேய்ஸ் படம் ஷூட் பண்ணுனேன். அதுவரை மியூஸிக் யார்னு ஃபிக்ஸ் பண்ணலை. படத்துல எட்டு சாங்ஸ் இருக்கு, மியூசிக்குக்கு விஷயங்கள் இருக்கு... அந்த நேரத்தில்தான் ராஜா சாரோட மேனேஜர்கிட்ட ஃபோன்ல பேசி அப்பாயின்மெண்ட் வாங்கினேன். எனக்கு ஒரு பயம் அவர் ஓகே சொல்வாரான்னு. பட்.. என்னை அவ்வளவு தூரம் கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ண வச்சு எங்கிட்ட நிறைய பேசி கதை பற்றி பேசி நான் ஷூட் பண்ணுன விஷுவல்ஸை அவரோட லேப் டாப்ல பார்த்து எட்டு சாங்ஸுக்கு 14 டியூன் போட்டுக் கொடுத்தார். லண்டன்ல அவர் ஒவ்வொரு இன்ஸ்ட்ரூமெண்டையும் மிக்ஸ் பண்ணுனப்போ நான் கூடவே இருந்தேன். ஸோ இது எனக்கு ஒரு மியூஸிகல் ஜர்னியாகவும் அமைஞ்சது.
மூன்று ஒளிப்பதிவாளர்களை பயன்படுத்தியது.
எனக்கு அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்லை. எம்.எஸ்.பிரபு சார்தான் ஸ்டார்ட் பண்ணினார். ஸ்கூல் போர்ஷன் காலேஜ் போர்ஷனெல்லாம் அவர்தான் ஷூட் பண்ணி கொடுத்தார். அவர் கிட்டயிருந்து நான் நிறைய கத்துகிட்டேன். அவருக்கு வேற வேலை இருந்ததால ஒருகட்டத்தில் ஓம் பிரகாஷ் வந்தார். செகண்ட் ஆஃப் ஆல்மோஸ்ட் அவர்தான் ஒளிப்பதிவு செய்தார். அவருக்கு அஜீத் படம் இருந்ததால் கடைசியில் கதிர் வந்தார். எல்லாமே எதிர்பாராம நடந்தது.
தொடர்ந்து காதல் படங்கள்.
எனக்கு நல்ல லவ் ஸ்டோரி பிடிக்கும். என்னை மாதிரி லவ் ஸ்டோரி விரும்புறவங்களுக்குதான் இந்தப் படம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.