தென்கொரியாவின் மின்னணுவியல் நிறுவனமான சாம்சுங் இந்த ஆண்டின் இறுதி அறிக்கையில் மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தனது புதிய தயாரிப்பான சாம்சுங் கேலக்ஸி எஸ் 4 வெளியிடுவது குறித்ததாகவும் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாம்சுங் கேலக்ஸி எஸ் 3 கடந்த மே மாத இறுதியில் தான் வெளியானது. ஆனால் சாம்சுங்கின் அடுத்த வெளியீடான கேலக்ஸி எஸ்-4 பற்றிய பரபரப்பு சில மாதங்களுக்கு முன்பே பரவத் தொடங்கிவிட்டது.
ஹெச்டி திரை, 13 மெகாபிக்சல் கேமரா, வொயர்லெஸ் சார்ஜர், மொபைல் பேமண்ட் வசதிகள் என பல்வேறு வசதிகள் இந்த மாடலில் எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சுங்கின் இந்த ஆண்டுக்கான மாபெரும் கருத்துக்களம் நிகழ்வு வரும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை மொனாக்கோவில் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு ஐரோப்பாவில் நடந்த மாபெரும் நிகழ்வோடு ஒப்பிடும் போது இந்த ஆண்டு பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.