கடந்த இரண்டு நாட்களில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 26 பேர் இந்திய கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் ஆந்திர பிரதேசத்திலுள்ள கிருஸ்ணப்பட்டின கடல்பரப்பிலும், புதுச்சேரிக் கடல்பரப்பிலும் டிசெம்பர் மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இந்திய கடலோர காவற்படையினரால் இடைமறித்து கைதுசெய்யப்பட்டனர்.
இதேவேளை, இவர்கள் பயணித்த 5 படகுகளையும் இந்திய கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இத்துடன் கடந்த 10 நாட்களில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்தார்கள் என்ற குற்றத்துக்காக இலங்கை மீனவர்கள் 82 பேர் இந்திய கடலோர காவற்படையினர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தமிழ் நாட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடலோர காவற்படையினரின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.