மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இயக்குனர் கேட்காமலே பாடலை கம்போஸ் செய்த ஹாரிஸ்.

கேட்கிற பாடல்களை கொடுப்பதற்கே பாடலுக்கு மூன்று மாசம் எடுக்கிறவர் ஹாரிஸ் ஜெயரா‌ஜ். இரண்டாம் உலகத்துக்கு நேரம் இல்லை என்று பின்னணி இசையமைக்காமல் விலகிக் கொண்டவர் இயக்குனர் கேட்காமலே ஒரு பாடலை கம்போஸ் செய்திருக்கிறார்.

அந்தப் படம் என்றென்றும் புன்னகை. ‌ஜீவா, த்‌ரிஷா, வினய், ஆண்ட்‌ரியா, சந்தானம் நடித்திருக்கும் இந்தப் படத்தை வாமனனை இயக்கிய அகமது இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடி. படத்தின் பாடல்களை ஏற்கனவே வெளியிட்டு விட்டனர்.

இந்நிலையில் பின்னணி இசை சேர்ப்புக்காக படத்தைப் பார்த்த ஹாரிஸ் ஜெயரா‌ஜ், படத்தில் இன்வால்வ் ஆகி மேலும் ஒரு பாடலை கம்போஸ் செய்து தந்திருக்கிறார். இந்தத் தகவலை அவரே ஆச்ச‌ரியத்தோடு சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 20ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.