மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


ICC உலக அணிகள் அறிவிப்பு ஒருநாள் அணியில் மூன்று இலங்கை வீரர்கள்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் 2013ஆம் ஆண்டுக்கான டெஸ்ற் மற்றும் ஒரு நாள் சர்வதேசப் போட்டி அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்டுள்ள அணிகளில் டெஸ்ற் அணியில் எந்தவொரு இலங்கை வீரரும் இடம்பெறவில்லை. எனினும் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் திலகரட்ன டில்ஷான், குமார் சங்கக்கார மற்றும் லசித் மலிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி முதல் 2013ம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற போட்டிகளில் வெளிப்படுத்தப்பட்ட திறமைகளைக் கருத்திற் கொண்டு இந்த அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவின் தலைவரான அணில் கும்ப்ளே தலைமையில் வக்கார் யுனிஸ், அலெக் ஸ்ருவேர்ட், கிறேம் பொலக் மற்றும் கத்தரின் கம்ப்பெல் ஆகியோர் இந்த அணிகளைத் தெரிவு செய்தனர்.

இந்தக் காலப்பகுதியில் இலங்கை அணி 7 டெஸ்ற் போட்டிகளில் மாத்திரம் பங்குபற்றியிருந்த நிலையில், குமார் சங்கக்காரவின் சிறந்த துடுப்பாட்டமும் ரங்கன ஹேரத்தின் சிறந்த பந்துவீச்சும் ஏனைய வீரர்களோடு போட்டியிடாது போனது.

டெஸ்ற் அணியின் தலைவராக அலஸ்ரெயர் குக் உம், ஒரு நாள் சர்வதேசப் போட்டி அணியின் தலைவராக மகேந்திரசிங் டோணியும் தெரிவாகியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் சபை டெஸ்ற் அணி:

அலஸ்ரெயர் குக், செற்றேஸ்வர் புஜாரா, ஹசிம் அம்லா, மைக்கல் கிளார்க், மைக்கல் ஹசி, ஏபி.டி.வில்லியர்ஸ், மகேந்திர சிங் டோணி, கிறேம் ஸ்வான், டேல் ஸ்ரெய்ன், ஜேம்ஸ் அன்டர்சன், வேர்ணன் பிலாந்தர், 12ஆவது வீரர் - ரவிச்சந்திரன் அஷ்வின்

சர்வதேச கிரிக்கெட் சபை ஒருநாள் சர்வதேசப் போட்டி அணி:

திலகரட்ண டில்ஷான்,  ஷீகர் தவான், ஹசிம் அம்லா, குமார் சங்கக்கார, ஏபி.டி.வில்லியர்ஸ், மகேந்திரசிங் மோணி, இரவீந்திர ஜடேஜா, சயீட் அஜ்மல், மிற்சல் ஸ்ரார்க், ஜேம்ஸ் அன்டர்சன், லசித் மலிங்க, 12ஆவது வீரர் - மிற்சல் மக்லநகன்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.