'சிம்புவையாவது மன்னிக்கலாம். ஆனால் பிரபுதேவாவை ஒருபோதும் மன்னிக்க முடியாது' என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானதால் அந்த காதல் முறிந்து போனது.
பிரபுதேவாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான கல்யாணம் வரை சென்றது. திருமண திகதி அறிவிக்கவிருந்த நேரத்தில் பிரபுதேவாவுடனான உறவையும் முறித்துக்கொண்டு வெளியேறினார் நயன்தாரா.
சினிமாவில் இரண்டாவது ரவுண்ட் தொடங்கியுள்ள நயன்தாரா மீண்டும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் திரைப்படத்தில் இப்போது சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. அதோடு, இப்படத்தில் கிறிஸ்தவ பெண்ணாகவே நடிக்கிறாராம் நயன்தாரா. சிம்பு இந்துவாம்.
இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சிகளும் உள்ளதாம். அவர்கள் இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்துகொள்வது போன்று காட்சிகள் உள்ளதாம்.
நயன் - சிம்பு காதலர்களாக இருந்தபோது கண்ட கனவு நனவாகும் வகையில் இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். அதனால் சிம்பு – நயன்தாரா இருவருமே அந்த காட்சியில் மேக் அப் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்களாம்.
முதல் காதலரான சிம்புவுடன் மீண்டும் நடித்து வரும் நயன்தாரா, இரண்டாவது காதலரான பிரபுதேவாவின் திரைப்படத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் டென்சன் ஆகியுள்ள நயன்தாரா, 'எனது முதல் காதலரை மன்னிக்கலாம். ஆனால் இரண்டாவது காதலரை மன்னிக்க முடியாது. அதனால் எந்த சந்தர்ப்பத்திலும் அவரது திரைப்படத்தில் நான் நடிக்க வாய்ப்பே இல்லை' என்று நறுக்கென்று சொல்லி வருகிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.