சிம்பு - ஹன்சிகா ஜோடி பிரிந்துவிட்டதாக கொஞ்ச நாளாக குடுகுடுப்பை தட்டி வருகிறார்கள். சிம்பு அமெரிக்கா போனார், அந்தம்மா கதவை சாத்திச்சி என்றெல்லாம் எழுதி குவித்தனர். நயன்தாராவுடன் சிம்பு ஜோடி சேர்ந்ததும் குடுகுடுப்பையின் தொந்தரவு அதிகமானது. அதான் அப்பவே சொன்னோமே, ஹன்சிகா காதல் அவ்ளோதான், இனி புதிய அத்தியாயம் என்று சிம்பு - நயன்தாரா கிசுகிசுவுக்கு தாவினர்.
ஆனால் இவையெல்லாம் உங்க கற்பனை, உண்மை நிலவரம் வேறு என்று 2 ஆம் தேதி இரவு நிரூபித்தார் ஹன்சிகா.
நேற்று சிம்புவின் பிறந்தநாள் என்பதால் 2 ஆம் தேதி இரவே கொண்டாட்டங்கள் தொடங்கியது. சரியாக இரவு 12 மணிக்கு பட்டாசு வேடித்து பிறந்தநாளை வரவேற்றனர். இந்த அமர்க்கள வரவேற்பின் நடுநாயகமாக இருந்தவர் ஹன்சிகா. சரியாக பன்னிரெண்டு மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக அவர் சிம்புவுடனே இருந்தார்.
சிம்பு - ஹன்சிகா லவ் இன்னும் லைவ்வாகதான் இருக்கு என்பதற்கு இதைவிட சாட்சி என்ன வேண்டும்.
சிம்பு - ஹன்சிகா காதல் புட்டுகிச்சி என்று எழுதிய எல்லோருக்கும் 2 ஆம் தேதி இரவு இருவருமாக இலவச அல்வா விநியோகித்ததுதான் இன்று கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.