துப்பாக்கியில் ஹிட்டடித்த விஜய்யும், முருகதாஸும் மீண்டும் இணைகிறார்கள். ஐங்கரன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அதிரடி, வாள் என இரு பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
சிலர் சொல்வது போல் இது துப்பாக்கியின் இரண்டாம் பாகம் கிடையாது. அதனை முருகதாஸே தெளிவாக கூறிவிட்டார். துப்பாக்கி மும்பை களம் என்றால் இது கொல்கத்தா. நேற்று கொல்கத்தாவில் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.
விஜய், முருகதாஸ் இணையும் புதுப்படத்துக்கான பாடல்கள் தயாராகிவிட்டன. இந்தத் தகவலை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
ராஜா ராணிக்கு ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் சி.வில்லிம்ஸ் கேமராமேன். இசை அனிருத். அனிருத்தை தேர்வு செய்ததால் படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே மொத்த பாடல்களின் கம்போஸிங்கும் தயார். பாடல்கள் மதன்கார்க்கி.
இதுவே ஹாரிஸ் ஜெயராஜாக இருந்தால் மொத்த படப்பிடிப்பும் முடியும் போதுதான் கடைசி பாடலின் கம்போஸிங்குக்கு உட்காருவார். முருகதாஸுக்கு ஹாரிஸின் இந்த தாமதம் பிடிக்காமல்தான் துப்பாக்கி பாடல்கள் ஹிட்டாகியும் அவரை ஒதுக்கிவிட்டு அனிருத்தை இசையமைப்பாளராக்கினார்.
அனிருத்தும் பொறுப்பாகவும், சிறப்பாகவும் மொத்த பாடலையும் முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஹீரோயினாக சமந்தா நடிக்கலாம் என தெரிகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.