கரீனா கபூர் ஒரு மிர்ரகிள். திருமணமான பிறகு நடிகைகளுக்கு இந்திய சினிமா முக்கியத்துவம் தருவதில்லை. அப்படியே தந்தாலும் கிளாமர் நாயகியாக வலம் வருவது குதிரை கொம்பு. அந்த பழைய சரித்திரம் கரீனா கபூரிடம் செல்லுபடியாகவில்லை. திருமணத்துக்குப் பிறகும் கிளாமரான நாயகி வேடத்துக்கு இவரை அணுகுகிறவர்களின் எண்ணிக்கை கணிசமானது.
சைப் அலிகானை கரீனா திருமணம் செய்த பிறகும் கிளாமர் வேடங்களில் நடிக்கிறார். மாமியாரின் மனதை நோகடிக்கக் கூடாது என்பதற்காக ஒரேயொரு கண்டிஷன். முத்தக் காட்சியில் நடிப்பதில்லை. மற்றபடி கிளாமருக்கு கரீனா கியாரண்டி.
திருமணமான மூன்றாவது மாதத்திலிருந்து மீடியா கரீனாவின் முகத்தைவிட வயிற்றைதான் அதிகம் நோட்டமிடுகிறது. சின்னதாக உப்பி தெரிந்தாலும் தலைப்பு செய்திதான். கரீனா கர்ப்பம். ஆனால் இன்றுவரை அப்படி எழுதுவதற்கான வாய்ப்பை அவர் தரவில்லை. குயிலுக்கும் குரல் பிசகும்தானே (எத்தனை நாளைக்குதான் யானைக்கும் அடிசறுக்கும்னு எழுதுறது?)
சமீபத்தில் கரீனா கலந்து கொண்ட விழாவில் அவரைப் பார்த்த நிருபர்களுக்கு கையும் ஓடவில்லை பேனாவும் நகரவில்லை. கரீனாவின் வயிறு உப்பிய மாதிரி அவர்களுக்கு ஒரு ஃபீலிங்.
இந்தியாவை வறுமைக் கோட்டுக்கு கீழிருந்து காப்பாற்றும் சந்தேகத்தை உடனே நிவர்த்தி செய்ய வேண்டுமே. கேட்டே விட்டார்கள், கரீனா நீங்கள் கர்ப்பமா
அந்த அழகான முகம் சிவந்துவிட்டது. வெட்கத்தில் அல்ல கோபத்தில். படத்தில் நடிக்கிறதுக்காக உடம்பை பிட்டாக்கி தயாரா இருக்கேன். இப்போ இப்படியொரு கேள்வியா. எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்கு. அதை நீங்க புரிஞ்சிக்கணும் என்று வறுத்தவர், குழந்தை பெத்துக்கிற ஆசையே எனக்கு இப்போ இல்லை. அஞ்சு வருஷத்துக்கு அப்புறம்தான் எல்லாம் என்றார் ஒரே போடாக.
சம்பந்தப்பட்ட கரீனாவுக்கே விருப்பமில்லாத விஷயத்தில் மீடியா ஏன் ஆர்வம் காட்டுது என்பதுதான் புரியவில்லை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.