மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சூர்யா பார்ட்டி விஜய் அழைத்தும் வரவில்லையா இல்லை அழைப்பே இல்லையா?

கமல்ஹாசன், வைரமுத்து இருவரும் பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். சந்தோஷ் சிவன் பத்மஸ்ரீக்கு. விருது கிடைத்த மூவரும் இதுவரை பெ‌ரிதாக பார்ட்டி எதுவும் வைத்ததாக‌த் தெ‌ரியவில்லை. விருது கிடைத்தவர்கள்தான் பார்ட்டி வைக்க வேண்டுமா? பத்மஸ்ரீக்காக சூர்யா பார்ட்டி வைத்தார்.

சந்தோஷ் சிவன் அஞ்சான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஒரு படத்தில் பணிபு‌ரியும் போது பிறந்தநாள் வந்தாலும் அந்த படப்பிடிப்பில்தான் கேக் வெட்டியாகணும். அந்த நபருக்கே தெ‌ரியாமல் கேக் வரவழைத்து சர்ப்ரைஸாக திக்கு முக்காட வைப்பார்கள். பிறந்தநாளுக்கே அப்படியென்றால் இது பத்மஸ்ரீ. விடுவார்களா?

சந்தோஷ் சிவனுக்கு பத்மஸ்ரீ கிடைத்ததற்காக சூர்யா பார்ட்டி ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார். தனுஷ், ஸ்ருதி, பிரபுதேவா, தனஞ்செயன், அனிருத் என்று அனைவரும் ஆஜர். விஜய்யும் வருவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். சந்தோஷ் சிவனின் முந்தையப்படம் துப்பாக்கியின் ஹீரோ அவர்தானே.

அழைத்து வரவில்லையா இல்லை அழைப்பே இல்லையா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.