அனேகன் சுமாராகப் போகும் நிலையில் நாளை 27 -ஆம் தேதி தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன் நடித்துள்ள காக்கி சட்டை வெளியாகிறது. சிவ கார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள முதல் ஆக்ஷன் படம். அனேகனைவிட பெரிய ஹிட்டாகக் கூடாது என்பதே தனுஷ் ரசிகர்களின் பிரார்த்தனை.
வளர்த்த கடா நெஞ்சில் பாய்ந்த வேதனையில் தனுஷ் இருக்கிறார். தம்பி என்று அவர் கைதூக்கிவிட்ட சிவ கார்த்திகேயன்தான் இப்போது அவரது தொழில் போட்டியாளர். வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை படங்களில் காக்கி சட்டை படத்துக்குதான் தொலைக்காட்சிகள் அதிக விலைதர முன்வந்தன. அதேபோல் விநியோகஸ்தர்களும்.
நல்லவேளையாக வேலையில்லா பட்டதாரி நன்றாக ஓடியதால் தனுஷ் தப்பித்தார். இல்லை என்றால் சிவ கார்த்திகேயனுடன் ஒப்பிட்டே அவரை நோகடித்திருப்பார்கள்.
சிவ கார்த்திகேயனை வைத்து முதலில் தயாரித்த எதிர்நீச்சலுக்கு ஓடியாடி விளம்பரம் செய்த தனுஷ் காக்கி சட்டையை கண்டு கொள்ளவேயில்லை. இதை முன்னிட்டு இரண்டு பேருக்கும் லடாய் என மீண்டும் மீடியா கிசுகிசுத்தது. அதற்கு சிவ கார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.
நானும் தனுஷும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. பட புரமோஷன்களில் அவர் கலந்து கொள்ளாததற்கு வேறு காரணம் உள்ளது. முதலில் எங்களை தூக்கி விட தனுஷ் வந்தார். தற்போது நாங்கள் வளர்ந்து விட்டதால், உங்களை நீங்கள் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி கலந்துக் கொள்ளவில்லை என்றார்.
சிவ கார்த்திகேயன் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி விளக்கம் அளிக்க வேண்டி வருமோ?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.