கோடரி தாக்குதலுக்கு இலக்காகி கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் விஷேட கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன ( வெலிராஜு) இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
40 வயதான அவர், இன்று அதிகாலை 3.50 அளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜனாதிபதியின் சகோதரரான பிரியந்த சிறிசேனவை கோடரியினால் தாக்கிய இஷான் லக்மால் என்பவர் காவற்துறையில் சரணடைந்ததை அடுத்து, அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று பொலநறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரியந்த சிறிசேன மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட கோடரி, நேற்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பொலநறுவை புதிய நகரின் ஹத்தறஹெல பிரதேசத்தில் இருந்து கோடரி மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.