முன்நாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் , மாலக சில்வா தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் மீறி இரவுநேர விடுதிகளுக்குச் சென்றுவருகிறார் என்பது பலரும் அறிந்த விடையம். இதேவேளை வெளிநாட்டவர் ஒருவரை தாக்கிய வழக்கில் இவர் மீது விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது. நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த மாலக சில்வா, நான் இலங்கையில் வாழவேண்டும். ஆனால் எனக்கு போடப்பட்டுள்ள தடைக்கு , நான் இலங்கையில் இருக்க முடியாது. நான் உண்மையில் எவரையும் தாக்கவில்லை. மாறாக என்னை தான் பலர் தாக்கி காயமாக்கியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விபச்சாரத்தை உத்தியோகபூர்வமாக அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது சாத்தியமா என்று தெரியவில்லை. இலங்கை ஒன்றா இரண்டா ? எத்தனை விபச்சார விடுதிகள் இருக்கிறது. ஆனால் அவை அதிகரித்தால் , உடல் தேவை குறையும். எனவே கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் பாலியல் கொடுமையில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். என்ன ஒரு அறிவு பார்த்தீர்களா ? அதுபோக நான் வரவுள்ள தேர்தலிலும் போட்டியிட உள்ளேன் என்று வாய் கூசாமல் கூறியுள்ளார் மாலக சில்வா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.