நடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் நடிகை சுருதி ஹாஸன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல தெலுங்குபட டைஅரகடர் வம்சி இயக்குகிறார்.
பாதிப் படம் முடிந்த நிலையில் ஸ்ருதிஹாசன் தன்னிடம் தேதிகள் இல்லை. எனவே நடிக்க முடியாது என இ-மெயிலில் தகவல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த நிறுவனம் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஸ்ருதிஹாசன் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடர்ந்தது.
அந்த மனுவில், "ஸ்ருதிஹாசன் எங்கள் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவரிடம் கால்ஷீட் பெற்றோம். இப்போது பாதிப் படம் முடிந்த நிலையில், தன்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதனால் எங்களுக்கு மற்ற நடிகர்களிடம் வாங்கிய ஒப்பந்த தேதிகளும் வீணாகிவிட்டது. இவருடைய இந்த செயலால் எங்களுடைய பணம் இழப்பு மட்டுமில்லாமல், எங்கள் நிறுவனத்திற்கு உண்டான நன்மதிப்பும் இழக்கப்பட்டுள்ளது.
ஸ்ருதிஹாசன் செயலால் எங்களுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரமும் வீணாகிவிட்டது. மேலும் மற்ற நடிகர்களிடம் வாங்கிய தேதிகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டதால், அந்த நடிகர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மீதான நல்லெண்ணமும், மரியாதையும் இழக்கப்பட்டுள்ளது. அவருடைய இந்த நடவடிக்கை மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும் மற்றும் எங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதாலும் ஸ்ருதிஹாசன் மீது சிவில் மற்றும் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை நடிகை ஸ்ருதிஹாசன் புதுப் படங்களில் ஒப்பந்தமாகக் கூடாது. அவரை எந்த நிறுவனமும் ஒப்பந்தம் செய்யவும் கூடாது. இந்த கிரிமினல் குற்றத்துக்காக அவரை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, பஞ்சாரா ல்ஸ் காவல் நிலையத்தில் நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு ஜூபிளி ல்ஸ் காவல் நிலைய அதிகார எல்லைக்கு உட்பட்டது என அந்த காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.