தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான தளமான வடக்கு- கிழக்குக்கு மாகாணங்களுக்கு வெளியேயும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு - கிழக்குக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கூட்டமைப்பு கோரினாலும், அடுத்த தேர்தலில் தமது கட்சி வேறு மாகாணங்களிலும் போட்டியிடலாம் எனவும் கூறினார்.
விசேட செவ்வியொன்றில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி, 'வடக்கோடு நாம் எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் நாம் முழுமையாக பங்களித்தோம். பிரதம நீதியரசருக்கு எதிரான பதவி விலக்கல் பிரேணையை நாம் எதிர்த்தோம். எனவே, தற்போதைய நிலையில் நாம் தேசிய பிரச்சினைகளில் பங்களித்து வருகிறோம்' எனக் கூறினார்.
எவ்வாறாயினும், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்திய சுமந்திரன், 'நாம் கரிசனை கொண்டுள்ள தேசிய பிரச்சினை என்று ஒன்றுள்ளது. அது தீர்க்கப்பட வேண்டும். அதை தேர்தலுக்கு முன்னர் முழுமையாக தீர்க்க வேண்டிய தேவையில்லை என நாம் இந்த அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்' என்றார்.
'இதை பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோர் நாடாளுமன்றத்தில் கூறினர். இந்த அரசாங்கம் 19ஆவது திருத்தின் போது இது பற்றி கூறியது. அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு காணப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் கூறினார். இந்த தீர்வு எமது கரிசனையாகவும் மக்களின் கரிசனையாகவும் உள்ளது' என்றும் அவர் கூறினார்.
'அரசாங்கம் சரியான திசையில் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. ஆனால், காணி மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
100 நாட்களினுள் முழுக் காணிகளும் விடுவிக்கப்படும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால், 5 சதவீதமான காணிகள் தான் விடுவிக்கப்பட்டுள்ளன. எனவே, இதையிட்டு நாம் விரக்தியடைந்துள்ளோம். அரசாங்கம் , காணிகளை விடுவித்து வருவதால்தான் நான் அரசாங்கம் நல்ல வழியில் செல்வதாக கூறினேன்' என்றார்.
'அடுத்த பிரச்சினை, அரசியல் கைதிகளைப் பற்றியதாகும். அவர்களை விடுவிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்;ளன. ஆனால், எவரும் விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என ஜனாதிபதி கூறியது கவலையளிக்கின்றது. இவர்கள் வன்முறையில் ஈடுபட்டாலும் சுயநலனுக்காக அதை செய்யவில்லை. அவர்கள் செயல் அரசியல் நோக்கம் கொண்டது. எனவே, அவர்கள் அரசியல் கைதிகள் என ஜனாதிபதியும் அரசாங்கமும் உணர வேண்டும்.
அரசியல் கைதி என்பதற்கு ஓர் அர்த்தம் உள்ளது. நெல்சன் மண்டேலா அரசியல் கைதியாக இருந்தார். அப்போது தென்னாபிரிக்க அரசாங்கத்திடம் இதுபற்றி கேட்டிருந்தால், அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றுதான் கூறியிருக்கும்.
உலகம் முழுதும் நெல்சன் மண்டேலாவை அரசியல் கைதியாக அங்கிகரித்திருந்தது. எனவே, அரசியல் கைதிகள் இருப்பதை எமது ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வெண்டும்' என சுமந்திரன் எம்.பி கோரினார்.
'இந்த அரசாங்கம் மெதுவாக செயற்பட்டாலும் சரியான திசையிலேயே செல்கின்றது. பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் ஆர்வமற்று இருந்ததை நாம் இதுவரை காணவில்லை. எனவே, அழுத்தம் கொடுத்தவாறு அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்போம்' என அவர் மேலும் கூறினார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.