மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


நாட்டைவிட்டு தப்பி ஓடும் நோக்கம் எனக்கு இல்லை கோட்டாபய ராஜபக்ஷ.

தனது முகப்புத்தகக் கணக்கில் செய்திக்குறிப்பொன்றை பதிவேற்றம் செய்துள்ள கோட்டாபய,  தன்னை சிங்கப்பூருக்கு வருமாறு அழைப்பு கிடைத்துள்ள போதிலும், இந்த நாட்டுக்கு என்னுடைய தேவை உள்ள இவ்வாறானதொரு தருணத்தில் நாட்டை விட்டுச் செல்லமாட்டேன் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

'நாட்டில் நிலைத்திருப்பதற்காக கொடுக்கப்படும் தைரியத்தையும் தன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

'சிங்கப்பூரிலிருந்து எனக்கு கிடைத்துள்ள அழைப்பு தொடர்பில் நீங்கள் அனைவரும் என்னிடம் எழுப்பும் கேள்விகளிலிருந்தே, நான் இந் நாட்டைவிட்டுச் செல்வதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகிறது.

உங்களுக்கும் இந்த தாய் நாட்டுக்கும் என்னுடைய சேவையின் அவசியம் இருக்கின்ற போது, இந்த நாட்டை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன். அது தொடர்பில் நான் உறுதியளிக்கிறேன்' என கோட்டாபய ராஜபக்ஷ, தனது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.