இலங்கையில் போதைப்பொருளை முற்றாக ஒழிப்பது தொடர்பான தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்ட நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று காலை காலி நகர மண்டப விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இதன்போது போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தி, பாடசாலை மட்டத்திலிருந்தே போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை சமுகத்தில் ஏற்படுத்தும் வகையில் காலி மாவட்ட பாடசாலைகளுக்கிடையே தெரிவு செய்யப்பட்ட 150 பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு ஊக்குவிப்பாளர் பதவிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போதைப்பொருளை நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்பது தொடர்பான உறுதியேற்ப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.