மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் “அகம் “நிறுவனம் பெண்களுக்கான பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது .
இதன் கீழ் சுயதொழில் ஈடுபட்டுள்ள பெண்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் சேதனை பசளை முறையிலான பயிர்செய்கை தொடர்பாக ஒரு நாள் பயிற்சி நெறி “அகம் “நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராசா திலீப்குமார் , தலைமையில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய திணைக்களத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சி நெறியில் வெல்லாவெளி , பட்டிப்பளை , வாகரை , கிரான் ,வவுணதீவு ஆகிய பிரதேசங்களில் சேதனை பசளை முறையில் பயிர் செய்கையினை மேற்கொண்டுள்ள பயனாளிகளில் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கு சேதனை பசளை முறையிலான பயிர்செய்கை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய திணைக்கள போதனாசிரியர் டி .பிரதீபன் , டி .ரமேஷன் . என் . பார்த்திபன் ஆகியோரினால் பயிற்சிகள் அளிக்கப்பட்டது .
இந்நிகழ்வில் நிறுவன திட்ட இணைப்பாளர் திருமதி எஸ் . நிரஞ்சினி நிறுவன கள உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
(நியூவற்றி அமிர்தகழி நிருபர்)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.