காலஞ்சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சரண் என்பவரை கைது செய்வதற்கு குற்றவிசாரணை பிரிவு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது. காவல்துறை தரப்பை மேற்கோள்காட்டி பிரதான செய்தி தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, ரவிராஜ் கொலை தொடர்பில் இதுவரையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. குறித்த நால்வரில் இரண்டு பேர் அரச தரப்பு சாட்சிகளாக மாறுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளர் என்றும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.