மட்டக்களப்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நவராத்திரி விழா மிக சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஏற்பாட்டில் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எழில் வாணி பத்மகுமாரின் ஒழுங்கமைப்பில் நவராத்திரி விழா இன்று பிற்பகல் நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது .
கல்வி,செல்வம்,வீரம் ஆகியவற்றை கொண்டு விளங்கும் முப்பெரும் தேவிகளுக்குரிய தினமாக இந்த நவராத்திரி தினம் ஒன்பது நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் சிறப்பு பூசைகள் நிகழ்வுகள் சைவப்புலவர் சித்தாந்த வித்தகர் திருமதி .சிவானந்தஜோதி ஞானசூரியத்தினால் நடத்தப்பட்டது .
இந்நிகழ்வில் அதிதியாக சிவயோகர் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார் , மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இடம்பெற்ற நவராத்திரி விழா நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றது.
(நியூவற்றி அமிர்தகழி நிருபர்)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.