சுகாதார அமைச்சும் தேசிய பாலியல் மற்றும் எச்.ஐ.வி. எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையமும் இணைந்து ஏற்பாடுசெய்த தேசிய எயிட்ஸ் தின நிகழ்வு இன்று காலை காந்தி பூங்கா அருகில் இடம்பெற்றது. தேசிய எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் "எச்.ஐ.வி தொற்றுள்ள எல்லோருக்கும் சிகிச்சை உண்டு" எனும் தொனியில் காந்திப்பூங்கா அருகில் இருந்து காலை ஆரம்பமானது.
கிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளர் கே.முருகானந்தன் தலைமையில் இந்த ஊர்வலம் காந்திபூங்காவில் ஆரம்பமாகி மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு சென்று வைத்தியசாலை வீதியூடாக மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம் வரை இடம்பெற்றது.
இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் வைத்திய பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள், சர்வமத தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பாதுகாப்பு படையினர், சிறைக்கைதிகள், இளைஞர்கழக உறுப்பினர்கள், அரச அலுவலக அதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.