மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சிவானந்தா வித்தியாலயத்தின் "சிவானந்தன் " சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில்  08வது “சிவானந்தன் “ சஞ்சிகை வெளியீட்டு விழா  இன்று பாடசாலையின்  அதிபர் க.மனோராஜ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட  சஞ்சிகையின் நூலாசிரியர்   உரையாற்றுகையில் இன்று வெளியிட்ட 08 வது “சிவானந்தன்“ சஞ்சிகையானது சுவாமி விபுலானந்தரின் சிந்தனைகளையும், இளம் தலைமுறையினரை திசை கெட்டுபோகாமல் நல்வழிப்படுத்தும் சஞ்சிகையாக அமைந்துள்ளது.

மீன்பாடும் வாவி சுவாமி விபுலானந்தரை யாழினை மீட்க உந்துசக்தியாக அமைந்ததோடு அந்தத்தேடல், ஆராய்வு  இளைய சிவானாந்தியருக்கான உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது.

இன்று சமயம் பற்றிய புரிதல்கள் இல்லாது போன சூழலில் மதங்கள் முல்வேலியாக கட்டமைக்கப்பட்ட சூழலில்  சுவாமி பிறமத இகழ்வினை கண்டிப்பாவராக இருந்துள்ளமையால் அவரின் வழிநடத்தலின் ஒன்றாக அமையபெற்ற 08 வது “சிவானந்தன் “ சஞ்சிகை வெளிவர வழிவகுத்துள்ளது என  இந்த சஞ்சிகையின் நூலாசிரியர் நிகழ்வில் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாலேந்திரன், சிறப்பு விருந்தினராக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ.சுகுமாரன், கௌரவ விருந்தினர்களாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வைத்தியர்  டி.கேதீஸ்வரன், பழைய மாணவ சங்க செயலாளர்  என்.தினேஸ்குமார், நூல் நயவுரை மண்முனை வடக்கு கலாசார உத்தியோகத்தர்  எஸ்.மலர்ச்செல்வன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.