விஷன் பன்ட் லங்கா (VisionFund Lanka) நிறுவனத்தின் கொத்தணி குழு தலைவர்களுக்கான வருடாந்த பயிற்சி பட்டறை இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விஷன் பன்ட் லங்கா நிறுவனம் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்ப பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக பல வேலைத்திட்டங்களை மாவட்ட ரீதியில் மேற்கொண்டு வருகின்றது.
இதன் கீழ் மண்முனை வடக்கு, ஆரையம்பதி, வவுணதீவு, கிரான், ஏறாவூர் பற்று, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலக கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள குடும்ப பெண்களின் வாழ்வாதாரத்தையும், பாடசாலை செல்லும் மாணவர்களின் கல்வியினையும் ஊக்கு விக்கும் முகமாக விஷன் பன்ட் லங்கா நிறுவனத்தின் கொத்தணி குழு தலைவர்களுக்கான வருடாந்த பயிற்சி பட்டறை மட்டக்களப்பு கிளை முகாமையாளர் கே.ஏகலைவன் தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சி.எ மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இன்று இடம்பெற்ற பயிற்சி பட்டறையில் மட்டக்களப்பு விஷன் பன்ட் லங்கா கிளை முகாமையாளர் , மண்முனை வடக்கு, ஆரையம்பதி, வவுணதீவு, கிரான், ஏறாவூர் பற்று, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலக கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள நிறுவனத்தின் கொத்தணி குழு தலைவர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
(லியோ)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.