மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பெண்ணொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர் .
இன்று புதன்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான பணிமனை பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் குறுக்கே வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிகின்றன.
இந்த விபத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(லியோ )
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.