நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 2 மணி முதல் சுமார் 4 மணித்தியாலங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தமைகான காரணங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. லக்ஷபான நீர் மின்னிலையத்திலிருந்து பொல்பிட்டிய உப மின் நிலையத்தினூடாக கொழும்புக்கு மின்சாரம் வழங்கும் பிரதான மின் மார்க்கத்தில் மின்னல் தாக்கியமையே இதற்கான காரணமென இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
மின் விநியோகத் தடை தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மின் சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் விசேட விசாரணை நடத்துமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியதாக மின் சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார தடையால் கொழும்பின் பல போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் செயலிழந்ததன் காரணமாக நகரில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதேவேளை, இன்று பிற்பகல் பாராளுமன்றத்திலும் மின்சார விநியோகம் தடைப்பட்டது. எது எவ்வாறாயினும், சபை நடவடிக்கைகள் வழமைபோன்று எந்தவித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டன.
மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நாடளாவிய ரீதியில் வானிலையிலும் மாற்றம் ஏற்பட்டு சீரற்ற கால நிலை நிலவியதுடன், சில பகுதிகளில் கடும் காற்று வீசியதுடன் குளிர் காலநிலை நிலவியதாகவும் கொழும்பின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததாகவும். பியகம, பண்டாரவத்த, சப்புகஸ்கந்த, ஒட்டுன்ன மற்றும் தெல்கொட ஆகிய பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதேவேளை, ஒட்டுன்ன பண்டாரவத்த உள்ளிட்ட சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
- A.D ஷான் -
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.