பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று ஹம்பாந்தோட்டை லுணுகம்வெகர பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.
லுணுகம்வெகர ரணசிறிபுர பிரதேசத்தில் முதியோரை கௌரவிக்கும் நிகழ்வொன்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து கூறிய அவர் :
பட்டதாரிகள் தொழில் கேட்டு குரல் எழுப்பும்போது அவர்களை தாக்குகின்றனர். ஊடகங்கள் சுதந்திரமாக கருத்துக்களை வௌியிடும் போது ஊடகங்களை ஒடுக்குகின்றனர். அச்சுறுத்துகின்றனர். அச்சுறுத்தி கவனமாக இருக்குமாறு கூறுகின்றனர். இல்லாவிடின் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கின்றனர். அதனால் நாம் எதிர்க்கட்சியாக செயற்படுகின்றோம். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர் எனினும் எமக்கு இணைய முடியாது.
பண்டாரநாயக்க கொள்கையின்படி எம்மால் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய முடியாது. அனைவரும் தற்போது இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் கூறுகிறார். வாதிட்டுக் கொண்டிருப்பதால் தமக்கு அதிக சிரமம் என்றும் கூறியுள்ளார். எனினும் எம்மை இணையுமாறு கூறிவிட்டு மறுபுறம் திட்டுகின்றார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.