மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஹேக்கர்களின் தாக்கத்துக்குள்ளாகும் அடோப் ரீடர் புரோகிராம்

பி.டி.எப்.பைல்களைப் படித்தறிய பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது அடோப் ரீடர் புரோகிராம் ஆகும். பொதுவாக அடோப் நிறுவனத்தின் புரோகிராம்கள் பாதுகாப்பானதாகத் தான் அனைவரும் எண்ணி பயன்படுத்தி வருகின்றனர். அப்படியே அனைத்து புரோகிராம்களும் இயங்கியும் வருகின்றன.

ஆனால் அண்மைக் காலத்தில் அடோப் நிறுவனம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதில் அதன் பிரபலமான பி.டி.எப். சாப்ட்வேர் தொகுப்பான அடோப் ரீடர் (விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் பதிப்புகள்) தொகுப்பின் கட்டமைப்பில் ஏதேனும் ஒன்றிரண்டு இடங்களில் ஹேக்கர்கள் நுழையக்கூடிய அபாயம் உள்ளதாக அறிவித்திருந்தது.

இதனைப் படித்த பலரும் இத்தொகுப்புகளைப் பயன் படுத்த பயப்படத் தொடங்கிவிட்டனர். ஆனால் இதற்கு அஞ்ச வேண்டியதில்லை. இதில் உள்ள ஜாவா ஸ்கிரிப்ட் இயக் கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் இந்த அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.

அடோப் நிறுவனமும் இந்த அபாயத்திற்கான சாப்ட்வேர் பேட்ச் பைலை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். அதுவரை நாம் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

1. முதலில் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்பினை (அண்மையில் வெளிவந்த பதிப்பு 9.1 வரை) உங்கள் கம்ப்யூட்டரில் திறக்கவும்.

2. Start என்பதில் இடது பக்கமாகக் கிளிக் செய்திடவும்.

3. திறக்கப்படும் மெனு விண்டோவில் All Programs என்பதன் மேல் கர்சரைக் கொண்டு செல்லவும்.

4. அடோப் ரீடர் என்பதில் இடது புறமாகக் கிளிக் செய்திடவும்.

5. அடோப் ரீடர் ஸ்கிரீனில் Edit என்பதில் மவுஸின் இடது பட்டனால் கிளிக் செய்திடவும்.

6. திறக்கப்படும் விண்டோவில் Preferences என்பதில் மவுஸின் இடது பட்டனால் கிளிக் செய்திடவும்.

7. Preferences ஸ்கிரீனில் Enable Acrobat Java Script உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

8. ஓகே பட்டனில் இடது பட்டன் மவுஸால் கிளிக் செய்து வெளியேறவும்.

அடோப் ரீடர் மற்றும் அடோப் அக்ரோபட் ஆகிய தொகுப்புகளில் இவ்வாறு எளிதாக ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கத்தினை முடக்கி வைக்கலாம். அடோப் நிறுவனம் தான் அறிவித்த பலவீனமான இடங்களுக்கான பேட்ச் பைலை வெளியிடும் வரை இதனையே பாதுகாப்பு கேடயமாக வைத்துக் கொள்ளலாம்.

பேட்ச் பைல் வெளியானவுடன் அதனை இன்ஸ்டால் செய்து பின் ஜாவா ஸ்கிரிப் இயக்கத்தினை இயக்குவதற்கான டிக் அடையாளத்தை ஏற்படுத்தலாம். இதில் இன்னொரு குறிப்பினையும் தருகிறேன். இணையத்தில் வேறு சில பி.டி.எப். ரீடர்களூம் கிடைக்கின்றன.

இவற்றில் என்ன விசேஷம் என்றால் இவை ஜாவா ஸ்கிரிப்ட் பிழைகளால் பாதிப்படைவதில்லை. இந்த தொகுப்புகளைப் பெற கீழ்க்காணும் முகவரிகளில் உள்ள தளங்களுக்குச் செல்லவும்.

தளமுகவரி : இங்கே கிளிக் செய்யவும்

தளமுகவரி : இங்கே கிளிக் செய்யவும்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.