
’’தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரம் நற்பணி மன்றங்கள் உள்ளன. இந்த மன்றங்கள் சார்பில் ரசிகர்கள் நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் தகுதிக்கு மீறி, பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள்.
நற்பணி மன்றங்களை, அரசியல் அமைப்பாக மாற்றினால் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் அதிக அளவில் உதவிகளை செய்யலாம் என்பது என் ரசிகர்களின் விருப்பம்.
இதை என்னிடம் பலமுறை சொல்லி வந்தார்கள். என் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக எனக்குள் திட்டம் இருந்தது.
அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் என்னை மகனாகவும், அண்ணன்-தம்பியாகவும் நினைக்கும் தமிழ்நாட்டு பொதுமக்களுக்கும் நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்பட்டேன். அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில், எனக்கும் உடன்பாடு ஏற்பட்டது.
இது தொடர்பாக ரசிகர்களின் விருப்பத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் கேட்டு அறிய விரும்பினேன். இதற்காக சென்னையிலும், சில மாவட்ட தலைநகரங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. படித்த இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவினரிடம் கருத்துக்களை கேட்டு, என் மூளையில் பதிவு செய்து, அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன்.
எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உடனடியாக அரசியலில் குதிப்பதிலும், கட்சி தொடங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை’’என்று தெரிவித்தார்.
நன்றி :: நக்கீரன்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.