மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மீண்டும் சினேகாவுக்கு சிக்கல்

எந்த நேரத்தில் ஆக்ஷன் படத்தில் நடிக்க ஆரம்பித்தாரோ, போகிற இடங்களில் கூட பவானி ஐபிஎஸ் ஆகிவிடுகிறார் சினேகா. அதாவது வம்புக்கு ‘வெல்கம்’ போடுகிற மாதிரி சச்சரவுகளில் சிக்கி, சந்தோஷத்தை போக்கிக் கொள்வது! சில தினங்களுக்கு முன் கடை திறப்பு விழா ஒன்றுக்காக திருச்சிக்கு போயிருந்தார். போன இடத்தில் இவரை நெருக்கி தள்ளிய கூட்டத்திலிருந்து ஒரு கை இவரது இடுப்பை கிள்ள, அதிர்ந்தே போனார் சினேகா. நடிகைகள் வாழ்வில் இதெல்லாம் சகஜம் என்றாலும், சினேகாவுக்கு கோபம் மூக்கு மேல் வந்துவிட்டது.

தன்னை கிள்ளிய ஆளை செக்யூரிடிகளுக்கு அடையாளம் காட்டிவிட்டார். “அதோ, அந்த நீல சட்டைதான்...” ஆபத்துக்கு உசிரையே கொடுக்கிற ஆளுங்களாச்சே? அடிச்சு துவைச்சுட்டாங்க அந்த நீல சட்டைக்காரரை. நல்லவேளையாக செய்தியை கேள்விப்பட்ட போலீஸ் ஓடிவந்து மீட்டது நீல ஆசாமியை. ஆனால் அவரோ, “கூட்டத்திலே கை பட்டுடுச்சு. அவ்வளவுதான். நான் தவறாக நடந்து கொள்ளவில்லை. இந்த கடைக்கு பர்சேஸ் பண்றதுக்காக என் மனைவியோடு வந்தவன் நான். இந்த நேரத்திலே இப்படி யாராவது நடந்து கொள்வாங்களா?” என்கிறார்.

விவகாரம் இதோடு முடிந்தால் பரவாயில்லை. “என் கணவர் எங்கள் ஊர் பகுதியில் நல்ல ஸ்டேட்டசில் இருப்பவர். அவருக்கு இப்படி ஒரு அவமானம் இழைக்கப்பட்டிருக்கிறது. இந்த கொடுமையை நான் சும்மாவிட மாட்டேன். சினேகா மீதும், சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீதும் மான நஷ்ட வழக்கு தொடருவேன்” என்று கூறியிருக்கிறார் அவரது மனைவி.

சப்போர்ட்டுக்கு எஸ்எம்எஸ் புகழ் ராகவேந்திராவை வேணும்னா கூப்பிட்டுக்கோங்க மக்கா!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.