மோசர் பேர், ப்ளூ ஓசனுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம், கண்டேன் காதலை. பரத், தமன்னா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
ஆர்.கண்ணன் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் ஜெயம் கொண்டான் படத்தை இயக்கியவர். கண்டேன் காதலை இரண்டாவது படம். இந்தியில் இம்தியாஸ் அலி இயக்கிய ஜப் வி மெட் படமே கண்டேன் காதலை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.
பழனி, சேவல், ஆறுமுகம் என தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்த பரத், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் காதல் படம் இது. அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்கள் நா.முத்துக்குமார், யுகபாரதி, கார்க்கி.
இந்தப் படத்துக்காக மர வீடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். பாடல் காட்சியொன்றை புத்தர் கோயிலில் எடுத்துள்ளனர். இது நிஜ புத்த கோவிலல்ல. படத்துக்காக கலை இயக்குனர் உருவாக்கியது. படத்தின் பெரும் பகுதியை மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கியுள்ளனர்.
ரீமேக் என்றாலும், தமிழுக்கு ஏற்றபடி காட்சிகளை மாற்றியிருப்பதாகக் கூறுகிறார் படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன். பரத் சக்தி என்ற கேரக்டரிலும், தமன்னா அஞ்சலி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தாய்மாமனாக சந்தானம் நடித்துள்ளார். இவர்களுடன் சபான் கான், மனோபாலா, தெலுங்கு நடிகர் முன்னா ஆகியோரும் நடித்துள்ளனர்.
சந்தானத்தின் கதாபாத்திரம் இந்தியில் ஒரு காட்சியில் மட்டுமே இடம்பெறும். அதனை படம் முழுக்க வருவதுபோல் மாற்றி அமைத்திருக்கிறார்கள். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.