நயன்தாரா நடித்துக் கொண்டிருந்த ஒரே தமிழ்ப் படம், ஆதவன். அதுவும் தீபாவளிக்கு வெளியாகிவிட்டது. அடுத்து என்ன? தவித்துப் போன நயன்தாரா ரசிகர்களுக்கு தண்ணீர் லாரியாக வந்திருக்கிறது ஒரு செய்தி. புதிய தமிழ்ப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் நயன்தாரா.
சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். நயன்தாராவுடன் ஜோடி போடப் போகிறவர் ஆர்யா. இவர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.
வாசன் விஷுவல் வெஞ்சர் தயாரிக்கும் இந்தப் பெயரிடப்படாத படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு சக்தி சரவணன். படத்தைப் பற்றி கேட்டபோது இயக்குனர் அளித்த கூடுதல் தகவல், இதுவொரு ரொமாண்டிக் காமெடியாம்.
நயன்தாராவுக்கு பொருத்தமான சப்ஜெக்ட்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.