அஜித்தின் 49வது படம், அசல். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என மூன்று வெற்றிகளை கொடுத்த சரண் - அஜித் - பரத்வாஜின் காம்பினேஷன் என்பதால் அசலும் வெற்றி பெறும் என கடைகோடி ரசிகர்களே நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
பணத்தை தண்ணீராக செலவழித்து சிவாஜி பிலிம்ஸ் அசலை தயாரித்திருப்பது இன்னொரு பிளஸ் பாயிண்ட்.
பொங்கலுக்கு அசல் வெளியாகும் என அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தனர். சில நடைமுறை சிக்கல்களால் அந்த நம்பிக்கை நமத்துப் போயுள்ளது. பிப்ரவரியில்தான் படம் திரைக்கு வருகிறதாம்.
அஜித், சமீரா ரெட்டி, பாவனா நடித்திருக்கும் அசலை பிப்ரவரி 5ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். கமர்ஷியல் படங்களை வலைவீசி பிடிக்கும் சேனல் வருந்தி கேட்டும் அவர்களுக்கு படத்தை கொடுக்காமல் சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள் பிரபுவும், ராம்குமாரும்.
படம் தப்பு செய்யாது என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம்.

:) ம்ம்ம் பாக்கலாம் :)
ReplyDelete