
பெரும்பாலான விபத்துகளினாலும், பல்வேறு நோய்களாலும் மனித உடலில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் எலும்பு, ரத்தம், தோல் போன்ற பகுதிகளாக உள்ளன.
இவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் மாற்று எலும்பு, ரத்தம், தோல் இவைத் தேவைப்படுகிறது. இவற்றை தானமாகப் பெற்று சரி செய்யப்பட்டாலும், இதன் தேவை மிக அதிகமாக உள்ளது. தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால், செயற்கையாக உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
எனவே இப்படி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரத்தம், தோல், எலும்பு ஆகியவற்றை செயற்கையாக உருவாக்குவதற்கான முயற்சியில் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் ராபர்ட் பிரவுன் தலைமையிலான விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள். மனித உடல் எடையில் 25 சதவீதம் கல்லகன் என்ற புரதச்சத்து நிறைந்து உள்ளது. இதில் இருந்து தண்ணீரை எடுத்து அதன் மூலம் மனித உடல் திசுக்களை உற்பத்தி செய்யும் வழிமுறையை அந்த விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த திசுக்களில் ஒரு பகுதியை கொண்டு தான் தோல், எலும்பு, விழி வெண் படலம் ஆகியவை உருவாகின்றன.
தோல், ரத்தம், எலும்பு விழி வெண்படலம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி அடைந்து வருகிறார்கள். இந்த பாகங்கள் இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் மருத்துவரீதியான பரிசோதனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திசுக்களை தயாரிப்பதற்கான கருவி சிறிய அளவில் மேஜையில் வைத்து கொள்ளக்கூடிய அளவிலேயே இருக்கும். இதன் மூலம் உடல் உதிரிப்பாகங்களை சில நிமிடங்களில் தயாரிக்க முடியும். இந்த உற்பத்தியில் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள ஆட்டோமேஷன் பார்ட்னர்ஷிப் என்ற நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.