மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இதய‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு செயற்கை இருதயம்

இருதய நோயால் பாதிக்கப்பட்டு, மாற்று இருதயம் கிடைக்காமல் உயிருக்கு போராடுபவர்களுக்கு செயற்கை இருதயம் பொருத்துவது பற்றி சென்னை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ஜப்பான் நாட்டு மரு‌த்துவ‌ர் விளக்கம் அளித்தார்.

சென்னை அரசு பெரிய மரு‌த்துவமனை‌யில் செயற்கை இருதயம் பொருத்துவது குறித்த விளக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மரு‌த்துவமனை‌யின் 3-வது மாடியில் உள்ள கருத்தரங்கு அறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு. சென்னை அரசு பெரிய மரு‌த்துவமனை‌ தலைவ‌ர் மரு‌த்துவ‌ர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார்.

இந்த விளக்க நிகழ்ச்சியில் ஜப்பானை சேர்ந்த மரு‌த்துவ‌ர் டோஷிமாஸா டொக்னோ செயற்கை இருதயத்தை எவ்வாறு பொருத்த வேண்டும் என்று விளக்கி கூறினார்.

இது குறித்து இருதய சிகிச்சைதுறை தலைவர் மரு‌த்துவ‌ர் வரதராஜன் கூறுகை‌யி‌ல், சென்னை அரசு மரு‌த்துவமனையில் மூளைச்சாவு மற்றும் விபத்தில் இறந்தவர்களின் இருதயங்கள் தானமாக பெறப்பட்டு இருதயம் செயல் இழந்தவர்களுக்கு பொருத்தப்பட்டு வருகிறது. ஒருவருக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டால் அதே ரத்தப்பிரிவு மற்றும் ஒத்துப்போகும் தன்மை கொண்ட மாற்று இருதயம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

சில நேரங்களில் மாற்று இருதயம் கிடைக்க கால தாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டுவிடும். இதற்காக ஜப்பான் நாட்டில் செயற்கை இருதயம் தயாரித்துள்ளனர். இதய பாதிப்படைந்து மாற்று இருதயம் கிடைக்காமல் உயிருக்கு போராடுபவர்கள் இந்த செயற்கை இருதயத்தை பொருத்திக் கொள்ளலாம்.

இருதயத்திற்கு அருகில் இந்த செயற்கை இருதயம் பொருத்தப்பட்டு ரத்தத்தை உள் இழுத்து மீண்டும் பாய்ச்சும் பணியை இந்த செயற்கை இருதயம் செய்யும். இது வரை ஜப்பான் நாட்டில் சுமார் 18 பேருக்கு இந்த செயற்கை இருதயம் பொருத்தப்பட்டுள்ளது. உடலுக்கு ஒத்துக்கொள்ளும் இருதயம் தானமாக கிடைத்ததும் செயற்கை இருதயத்தை அகற்றிவிட்டு தானமாக கிடைத்த இருதயத்தை பொருத்தி கொள்ளலாம்.

அதிகபட்சமாக ஜப்பானில் ஒருவர் 41/2 வருடம் செயற்கை இருதயத்தை பொருத்தி உயிர் வாழ்ந்துள்ளார். பின்னர் அவருக்கு தானமாக கிடைக்கப்பட்ட இருதயம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை இருதயத்தை 18 வயதில் இருந்து 70 வயது வரை உள்ளவர்கள் பொருத்தி கொள்ளலாம். ஜப்பானில் இந்த செயற்கை இருதயத்தின் அதிகபட்ச விலை ரூ.40 லட்சமாகும் எ‌ன்று மரு‌த்துவ‌ர் கூ‌றினா‌ர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.