மூன்று ஹீரோயின்களுடன் நடிப்பதென்ன சாதாரண விஷயமா? வெளியே இருந்து பார்ப்பதற்கு குஷாலாக தெரியும். ஆனால் உடன் நடிப்பவர்களுக்குதான் உள் குத்து வலி. இனிமேல் மூன்று ஹீரோயின்களுடன் நடிக்கவே மாட்டேன் என்று சபதம் போட்டார் விஷால். இடம், தேவி காம்ப்ளக்ஸில் நடந்த தீராத விளையாட்டு பிள்ளை ஆடியோ வெளியீட்டு விழா.
முதல் ஆடியோ சிடியை சிவசக்தி பாண்டியன், ஆர்.பி.சௌத்ரி வெளியிட கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். அரிவாளுக்குப் பதில் மூன்று ஹீரோயின்களை விஷால் கையில் கொடுத்திருக்கிறார்கள் என்று ஏரியாவை கலகலப்பாக்கினார் கே.எஸ்.ரவிக்குமார்.
நிகில் முருகன், விஷால், விக்ரம் கிருஷ்ணா அண்ணன் தம்பி பாசத்தை பகிர்ந்து கொண்ட விதம் சென்டிமெண்ட் டச்.
தீராத விளையாட்டு பிள்ளையில் நீது சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா என மூன்று பேர் நடித்திருக்கிறார்கள். நீது சந்திராவுக்கு மட்டும் தொடர்ந்து தமிழில் நடிக்கும் ஆசை இருக்கும் போல. அவர் மட்டுமே விழாவுக்கு ஆஜர். விரைவில் தமிழ் கத்துப்பேன் என்றார் அழகான ஆங்கிலத்தில்.
“முன்னூறு நானூறு கோடியில் ஹாலிவுட்டில் படம் எடுக்கிறான். அதே தரத்தில் முப்பது கோடியில் நம்மவர்கள் படமெடுத்தால், ஹாலிவுட்டைப் போல படமெடுத்திருக்கிறார்கள் என்று பாராட்டாமல் வேறு எப்படி பாராட்டுவது” என்று சம்பந்தமே இல்லாமல் கொந்தளித்தார் சிவசக்தி பாண்டியன்.
பிறகுதான் புரிந்தது. ஆயிரத்தில் ஒருவன் ஆடியோ விழாவில், “ஹாலிவுட் படம் மாதிரி இருக்குன்னு சொல்லாதீங்க” என்று கமல் பேசியதற்கு இவர் பதிலடி கொடுக்கிறாராம். நேரடியாகவே சொல்லியிருக்கலாமே பாண்டியன் சார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.