மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரஜினி மகள் திரைப்​ப​டத்தை வெளி​யிட தடை

நடி​கர் ரஜி​னி​காந்​தின் மகள் சௌந்​தர்யா தயா​ரிக்​கும் "கோவா' திரைப்​ப​டத்தை வெளி​யி​டு​வ​தற்கு உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது.

​ ரஜி​னி​காந்​தின் மகள் சௌந்​தர்யா "ஆக்​கர் ஸ்டு​டி​யோஸ்' என்ற படத் தயா​ரிப்பு நிறு​வ​னத்தை நடத்தி வரு​கி​றார்.

​ "சென்னை 600 028', "சரோஜா' ஆகி​யப் படங்​களை இயக்​கிய வெங்​கட் பிர​பு​வின் இயக்​கத்​தில் "கோவா' என்ற படத்தை சௌந்​தர்யா தயா​ரித்து வரு​கி​றார்.​ இந்​தத் திரைப்​ப​டம் தொடர்​பாக வருண் மணி​யன் என்​ப​வர் தாக்​கல் செய்த மனு விவ​ரம்:​

​ "என்​ஏ​பிசி பிராப்​பர்​டீஸ் லிமி​டெட்' என்ற நிறு​வ​னத்​தின் நிர்​வாக இயக்​கு​ந​ராக உள்​ளேன். எங்​கள் நிறு​வ​னம் கட்​டு​மா​னப் பணி​கள் உள்​ளிட்ட பல்​வேறு தொழில்​க​ளில் ஈடு​பட்டு வரு​கி​றது.​ "கோவா' திரைப்​ப​டத்​தைத் தயா​ரிக்க நிதி​யு​தவி கோரி "ஆக்​கர் ஸ்டு​டி​யோஸ்' நிர்​வா​கி​கள் என்னை அணு​கி​னர். நாங்​கள் வழங்​கும் தொகைக்கு ஆண்​டுக்கு 24 சத​வீத வட்டி அளிப்​ப​தா​க​வும் உறுதி அளித்​த​னர். இதை​ய​டுத்து,​ ரூ.1.1 கோடி கடன் வழங்​கப்​பட்​டது. ​ ​

​ இதற்கு கடன் உறு​திப் பத்​தி​ரங்​க​ளும் பெறப்​பட்​டுள்​ளது. அதே​போல்,​ எனது சொந்​தக் கணக்​கில் ரூ. 50 லட்​சம் வழங்​கி​யுள்​ளேன். ஆனால்,​ இந்​தப் பணத்​தையோ,​ வட்​டி​யையோ இது​வரை "ஆக்​கர் ஸ்டு​டி​யோஸ்' திருப்பி அளிக்​க​வில்லை. ​

"கோவா' திரைப்​ப​டம் முடி​வ​தற்கு முன்பு பணத்தை திருப்பி அளிப்​ப​தாக அவர்​கள் உறு​தி​ய​ளித்​த​னர். ​ தற்​போது,​ அந்​தப் படத்​தின் படப்​பி​டிப்பு முடிந்த நிலை​யில்,​ படம் விரை​வில் ரிலீ​ஸôக உள்​ளது. நாங்​கள் வழங்​கி​யப் பணத்​துக்கு வட்​டி​யு​டன் ரூ. 2 கோடி அளிக்க வேண்​டும். கடனை திருப்​பிச் செலுத்​தா​மல்,​ படத்தை வெளி​யி​டு​வ​தற்​குத் தடை விதிக்க வேண்​டும் என்று மனு​வில் கோரப்​பட்​டது.

இந்த மனு நீதி​பதி ஜி.ராஜ​சூர்யா முன்​னி​லை​யில் விசா​ர​ணைக்கு வந்​தது.

​ மனுவை விசா​ரித்த நீதி​பதி,​ டிசம்​பர் 11}ம் தேதி வரை "கோவா' படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்​தார். இது​தொ​டர்​பாக,​ பதி​ல​ளிக்​கு​மாறு சௌந்​தர்​யா​வுக்கு நோட்​டீஸ் அனுப்​ப​வும் நீதி​பதி உத்​த​ர​விட்​டார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.