மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கலகலக்கும் கச்சே‌ரி ஆரம்பம்

ர‌‌ஜினி, கமல் நடிக்கும் படங்களில் அவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களும் ஒரு காட்சியில் தலைகாட்டுவது வழக்கம்.

திரைவண்ணன் கொஞ்சம் வித்தியாசமான ஆள் போலிருக்கிறது. படத்தில் பணிபு‌ரியும் முக்கிய டெக்னிஷியன்களையும் தனது கச்சே‌ரி ஆரம்பம் படத்தில் நடிக்க விட்டிருக்கிறார்.

சீமான் போன்றவர்களிடம் அசிஸ்டெண்டாக இருந்த திரைவண்ணன் இயக்கும் முதல் படம் கச்சே‌ரி ஆரம்பம். ‌ஜீவா, பூனம் ப‌ஜ்வா நடிக்கின்றனர். டி.இமான் இசை.

சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. ‌ஜீவா, பூனம் ப‌ஜ்வாவுடன் படத்தின் முக்கிய டெக்னிஷியன்களையும் ஆடவிட்டிருக்கிறார் திரைவண்ணன். அவர்களில் டி.இமானின் ஆட்டம் வெகு பிரமாதம் என்கிறார்கள் யூனிட்டில்.

மிகுந்த பொருட் செலவில் ஆர்.பி.சௌத்‌ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் கச்சே‌ரி ஆரம்பத்தை தயா‌ரித்து வருகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.