மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சூப்பர் ஸ்டாருக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துகள்

ர‌ஜினிக்கு இன்று பிறந்தநாள். தலைவ‌ரின் அறுபதாவது பிறந்த நாளை ஆவேசமாக கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். ர‌ஜினி...? வழக்கம்போல இந்த கோலாகலங்களில் கலந்து கொள்ளாமல் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார்.

பிறந்தநாளின் போது சென்னையை விட்டு வேறு இடம் ஏகுவது ர‌ஜினிக்கு புதிதல்ல. இதுவொரு விளம்பர ஸ்டண்டுமல்ல. அன்றைய தினம் தான் யார், தன் பிறப்பின் நோக்கம் என்ன என்பதை வழக்கத்தைவிட தீவிரமாக யோசனை செய்வது அவரது பழக்கம் என்கிறார்கள் ர‌ஜினிக்கு நெருக்கமானவர்கள்.

ரசிகர்களின் நோக்கம் வேறு. அவர்களைப் பொறுத்தவரை தலைவ‌ரின் பிறந்தநாளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விம‌ரிசையாக கொண்டாட வேண்டும்.

சமீபமாக இந்த‌க் கொண்டாட்டம் சமூக சேவையாக உருமாறியிருப்பது வரவேற்கத்தக்கது. இலவச எல்ஐசி பாலிசி அளிப்பது, அன்னதானம், ரத்ததானம், கண் தானம் என்று நாடு முழுவதும் ர‌ஜினி ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.

ஆயிரமாயிரம் ரசிகர்களுடன் இணைந்து ர‌ஜினி தனது பிறந்தநாளை கொண்டாடும் நாள் வரவேண்டும் என்பதே பலரது பிரார்த்தனை. அப்படியொரு நாள், ர‌ஜினியின் நான் யார் என்ற தேடலுக்கான பதில் கிடைத்த பிறகே அமையும் என்றால், அந்த விடை விரைவில் கிடைக்க வேண்டும் என்பதே நமது ‌விரு‌ப்ப‌ம்.

சூப்பர் ஸ்டாருக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துகள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.