டயோடா கிர்லோஸ்கர் நிறுவனம் பிராடோ ரக நவீன புதிய டீசல் ரக காரை பெங்களூருவில் நேற்று அறிமுகம் செய்தது.
காரை அறிமுகப்படுத்திய டயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன மேலாண் இயக்குநர் ஹிரோஷி நாககாவா மற்றும் விற்பனைப் பிரிவு துணை மேலாண் இயக்குநர் சந்தீப் சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம், லேன்ட் குரூசர் பிராடோ என்ற நவீன ஸ்போட்ஸ் யூட்டிலிட்டி டீசல் என்ஜின் காரைமுதல் முறையாக அமல்படுத்தியுள்ளோம்.
நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை மலைப் பகுதியிலும் கரடு, முரடான காட்டுப் பகுதிகளிலும் ஓட்டலாம்.
இதில் 3.0 எல் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இதனல் தேசிய நெடுஞ்சாலைகளிலும், நகர சாலைகளில் செல்லும்போது நிலையான வேகத்தைக் கொடுக்கும். இந்த காரில் கைனட்டிக் டைனமிக் சஸ்பென்சன் சிஸ்டம், காலநிலை கட்டுப்படுத்தும் தானியங்கி, பல் நோக்கு தகவல் தரும் எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே, ஆப்டிட்ரான் மீட்டர், பார்க்கிங் செய்யும்போது முன், பின் வாகனத்தை பாதுகாப்பாக இயக்கும்போது உதவ சென்சார்கள், கேமராக்கள் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.
காரின் உட்புறம் தோல் பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதியில் கார் ஏறும்போதும், இறங்கும்போதும் டிரைவருக்கு உதவ டிஏடி தொழில்நுட்பம், வாகன வேகத்தை கட்டுப்படுத்தும் விஎஸ்சி தொழில்நுட்பம், மற்றும் அடாப்டிவ் டிராக்ஷன் கன்ட்ரோல் நுட்பம் போன்றவையும் உள்ளன.
வெள்ளை, சில்வர், சாம்பல், கருப்பு மற்றும் சாம்பல் நீலம் கலந்த மெட்டாலிக் போன்ற நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ.52.74 லட்சம் என்று தெரிவித்தனர்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.