வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாக நடிகர் விஜய் தெரிவித்தார். இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று அவர் கலாநிதிமாறனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கினார்.
வேட்டைக்காரன் படத்தை ஏவிஎம் தயாரித்திருந்தது. பிறகு படத்தின் ஒட்டுமொத்த உரிமையை சன் பிக்சர்ஸ் பெரும் தொகைக்கு வாங்கியது. படத்தை வெளியிட்டதுடன் மிகப் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து படத்தை ஓட வைத்துக் கொண்டிருப்பதும் சன் குழுமம்தான்.
நேற்று கலாநிதிமாறனை சந்தித்த விஜய் பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். வேட்டைக்காரன் படம் பிரமாண்டமான மெகா வெற்றியை பெற்றிருப்பதாகவும், ஏவிஎம் பாலசுப்பிரமணியன், சன் டிவி, கலாநிதிமாறன் ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து உங்கள் மகன் நடிப்பாரா என்ற கேள்விக்கு, இல்லை, இனி படிப்பு மட்டும்தான் என்றும் பதிலளித்தார்.
வேட்டைக்காரன் வெற்றி பெற்றதாகக் கூறி கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கிறார் படத்தை இயக்கிய பாபு சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.