குழந்தை இருப்பது போல் நடிக்கவே தயக்கம் காட்டும் தமிழ் சினிமாவில் எய்ட்ஸ் நோயாளியாக நடித்து வருகிறார் ஒரு நடிகை. அறிந்த முகமல்ல, இவர் புதுமுகம்.
எஸ்.கௌரி சங்கர் இயக்கும் பேசுவது கிளியா? படத்தின் கதையைக் கேட்டால் பச்சை மிளகாயை கடித்த மாதிரி சுர்ரென்கிறது. பிள்ளைகளுக்கு பணத்தை கொடுத்து படிக்க அனுப்பினால் போதாது, கொஞ்சம் பாசத்தையும் கொடுக்க வேண்டும் என்பதுதான் படத்தின் மெசேஜ். இந்த மெசேஜை அவர் சொல்லியிருக்கும் விதம்தான் பகீர்.
பெற்றோரின் பாசம் கிடைக்காத நாயகி போதைக்கு அடிமையாகிறார். அவரை மீட்க நண்பர்கள் போராடுகிறார்கள். ஒருகட்டத்தில் போதையின் கோரம் புரிந்து அதிலிருந்து மீள முயற்சிக்கிறார் நாயகி. ஆனால் காலம் கடந்துவிடுகிறது.
பல பேர் பயன்படுத்திய போதை ஊசியை பயன்படுத்தியதால் அவருக்கு எய்ட்ஸ். நாயகியின் முடிவு என்ன என்பதை முகத்தில் அறைகிற மாதிரி சொல்லியிருக்கிறார்களாம்.
எய்ட்ஸ் நோயாளியாக நடிக்க யாரும் முன்வராத நிலையில் ஷக்தி என்ற கல்லூரி மாணவி விருப்பத்துடன் முன்வந்திருக்கிறார். அவரை கௌரவிக்கும் விதமாக அவரது கேரக்டருக்கு ஷக்தி என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்.
விஜயகுமார் என்பவர் ஹீரோவாக நடிக்க ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா இசையமைத்திருக்கிறார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.