Tuesday, January 5, 2010

> கண்ணியம், கட்டுப்பாடு – அ‌ஜித் வலியுறுத்தல்

கட்டுக்கோப்பான இயக்கம் என பெயர் எடுத்த அ‌ஜித் ரசிகர் மன்றத்தில் சில வாரங்களாக சலசலப்பு. தலைமை நிர்வாகிக்கு எதிராக சிலர் போஸ்டர் அடிக்கும் அளவுக்கு இந்த வில்லங்கம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இதுபற்றி அ‌ஜித்தே ரசிகர்களுக்கு எச்ச‌ரிக்கை கலந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘என்னுடைய கலைப் பயணத்தில் கடந்த 18 வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்த என் ‘அசல்’ ரசிகர்களுக்கு வணக்கம் கலந்த புத்தாண்டு வாழ்த்துகள்’ எனத் தொடங்கும் அந்த அறிக்கை போகப் போக கார மிளகாயாக ரசிகர்களை காய்ந்தெடுக்கிறது.

அசல் படப்பிடிப்பை முடித்து, ஐம்பதாவது படத்துக்கான வேலைகளை தொடங்கியிருப்பதுடன், தனது செயலாளரும், நற்பணி இயக்கத்தின் தலைமை நிர்வாகியுமான சுரேஷ் சந்திரா மூலமாக இயக்கத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அ‌ஜித் அவ்வறிக்கையில் தெ‌ரிவித்துள்ளார்.

படம் ஓட ரசிகர்களின் பங்களிப்பு தேவை என்று சொல்லியிருப்பவர், படம் தரத்துடன் இருந்தால் மட்டுமே அந்தப் பங்களிப்பு இருக்கும் என்பதையும் தெ‌ரிவித்திருக்கிறார். படப்பிடிப்புக்கு நடுவில் தொந்தரவு கொடுக்கும் ரசிகர்களையும் தனது அறிக்கையில் ஒரு பிடிபிடித்திருக்கிறார் அ‌ஜித்.

தலைமை நிர்வாகி தனது வழிகாட்டுதலின்படி சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், தலைமை நிர்வாகத்துக்கு எதிராக சிலர் சுய விளம்பரத்துக்காக கண்டன சுவரொட்டிகள் ஒட்டுவதாககவும், அனுமதி இல்லாமல் ஊடகங்களில் கருத்து தெ‌ரிவிப்பதாகவும் கூறி‌யுள்ளார்.

இந்த‌ச் செயல்களை கண்டித்திருக்கும் அ‌ஜித், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் எந்த‌ச் செயலையும் தான் ஆத‌ரிப்பதில்லையென்றும், ரசிகர்கள் கண்ணியம் கட்டுபாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

2010 ஜனவ‌ரி முதல் நிர்வாகிகளை இரண்டு வருடங்களுக்கொருமுறை சுழற்சி முறையில் நியமிக்கப் போவதாகவும், மன்றம் குறித்த எந்த விஷயத்திலும் தனது முடிவே இறுதியானதும் என்றும் தெ‌ரிவித்துள்ளார்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.