வில்லனாக அறிமுகமாகி குணச்சித்திர நடிகனாக தொடர்ந்து ஹீரோவாக நிலைபெற்றிருப்பவர் கரண். பணமல்ல, சினிமாவின் மீதான மோகமே தன்னை இயங்க வைப்பதாக கூறும் அவர் புதுப்புது சோதனை முயற்சிகளுக்கு எப்போதும் தயாராக இருப்பதாக அறிவிக்கிறார். தான் நடித்த நடிக்கயிருக்கிற படங்கள் குறித்து அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை அபாராமானது. அவருடைய பேட்டியிலிருந்து...
வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக பரிமாணம் கொள்ளுவது சாதாரண விஷயமில்லையே?
நீங்க இப்படி கேட்பதைப் பார்த்தால் நான் ஏதோ நிறையப் படங்களில் வில்லனா நடித்ததுபோல் தோன்றுகிறது. உண்மை என்னன்னா சில படங்களில்தான் நான் வில்லனா நடிச்சிருக்கேன். நிறைய படங்களில் வில்லனா நடித்ததுபோல் தெரிய காரணம், அந்தப் படங்கள் ஏற்படுத்திய தாக்கமாக இருக்கலாம். நம்மவர் படம் நடித்து நிறைய வருடங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் யாரும் அதை மறக்கலை.
நெகடிவ் கேரக்டர்களில் நடித்தபோது பாஸிடிவ் கேரக்டர்களில் நடிக்கலாமே என்றார்கள். எனக்கு நெகடிவ் பாஸிடிவ் என்கிற இமேஜ் இல்லாத நடிகனாக இருக்கவே விருப்பம். வித்தியாசமான வேடம் வேண்டும் அவ்வளவுதான். அதனால் ஹீரோவாக மாறியதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. என்னால் முடியும் என்று நம்பிக்கையுடன் வாய்ப்பு தந்தார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை, காப்பாற்றிவிட்டேன்.
ஒரு கதாநாயகனாக உங்களின் அடையாளம் எது என்று நினைக்கிறீர்கள்?
இவர் இப்படிதான் இருப்பார், இவர் இந்த மாதிரியான கேரக்டர்களில்தான் நடிப்பார் என்கிற இமேஜ் வட்டத்துக்குள் சிக்குவதில் விருப்பமில்லை. கரண் எப்படியும் நடிப்பார், புதிதாக ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்தவகையில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக என்னை ஏற்றுக் கொண்டிருப்பது நல்ல விஷயம்தான்.
நீங்கள் நடித்தப் படங்களில் உங்களுக்கு திருப்தியா அமைந்த படம் எது?
நான் தேர்ந்தெடுத்தப் படங்களில் மட்டுமே நடிக்கிறேன். கமல் என்கிற ஸ்கூலிலிருந்து வந்துவிட்டு ஏனோதானோ படங்களில் நடிக்க விருப்பமில்லை. நிறைய படங்கள் எனக்கு பெயர் வாங்கித் தந்தன. நம்மவர், காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, லவ்டுடே, கண்ணெதிரே தோன்றினாள், திருநெல்வேலி... இந்தப் படங்களுக்குப் பிறகுதான் ஹீரோவாக நடித்தேன்.
நாமும் ஹீரோவாகலாம் என்ற நம்பிக்கை எப்படி வந்தது?
முதலில் எனக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசையெல்லாம் இல்லை. நண்பர்கள் முக்கியமாக விநியோகஸ்தர் நண்பர்கள் கொடுத்த தைரியத்தில்தான் ஹீரோவானேன். ஹீரோவாக நடிக்கும் போது நடிப்பில் பல பரிமாணங்களை காட்ட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது.
அந்த நம்பிக்கையை உங்கள் படங்கள் நிறைவேற்றியிருப்பதாக உணர்கிறீர்களா?
நான் ஹீரோவாக நடித்து இதுவரை ஐந்துப் படங்கள் வந்திருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வெவ்வேறு கதாபாத்திரங்கள். கொக்கி படம் நம்மவர் போல என்னுடைய கேரியரை மாற்றிப்போட்ட படம். இப்படியும் ஒரு ஹீரோ இருப்பானா என்று அந்தப் பாத்திரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. கருப்பசாமி குத்தகைதாரரில் சைக்கிள் ஸ்டேண்ட் வைத்திருப்பவர், தீ நகரில் முன்னாள் மாணவர் தலைவன், காத்தவராயனில் கள்ளச் சாராய வியாபாரி, மலையனில் பட்டாசு தொழிலாளி... ஐந்துப் படங்களிலும் வெரைட்டியான வித்தியாசமான கேரக்டர்கள்தான்.
உங்கள் வளர்ச்சியில் கமலின் பங்கு என்ன?
கமல் சாரின் அழுத்தமான அறிமுகம்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. அவர் நம்மவரில் போட்டுக் கொடுத்த அஸ்திவாரத்தில்தான் இன்று நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். கமல் சாரிடம் என் ஒவ்வொரு முயற்சி, முன்னேற்றம் பற்றி சொல்லி கருத்தும் யோசனையும் கேட்பேன். அவர் சரி தவறுகளை கூறுவார். என்னை அவர் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். அந்த எச்சரிக்கை உணர்வு என்னை சரியாக வழி நடத்தும் என நம்புகிறேன்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.