தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் அனுஷ்கா பீவர் உச்சத்தில் இருக்கிறது. அஜித், விக்ரமுடன் நடித்தால் தமிழில் அனுஷ்காவின் இளைய ஹீரோக்களுடனான ரவுண்ட் முழுமையடைந்துவிடும். இந்நிலையில் லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா படத்திலும் முக்கிய வேடமேற்கிறார் அனுஷ்கா.
லாரன்ஸ், அனுஷ்கா இருவரும் தமிழைவிட ஆந்திராவில் பிரபலம். அதனால் காஞ்சனா தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகிறது.
லாரன்ஸ் இந்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போது லாரன்சின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்றே பலரும் நினைத்திருந்தனர். படத்தின் ஹீரோ லாரன்ஸ் என்றாலும் அவருக்கு ஜோடி அனுஷ்கா அல்ல. மும்பையைச் சேர்ந்த புதுமுகம். ஹீரோவுக்கு ஜோடியில்லை, பிறகு எப்படி நடிக்க ஒப்புக் கொண்டார் அனுஷ்கா?
ஹீரோ லாரன்சுக்கு ஜோடியில்லை என்றாலும் டைட்டில் ரோலான காஞ்சனாவில் அனுஷ்காதான் நடிக்கிறார். ஹீரோவின் ஜோடியைவிட இந்த கதாபாத்திரத்துக்குதான் படத்தில் அதிக முக்கியத்துவம். மேலும் அருந்ததியைப் போன்ற கதையாம் காஞ்சனா.
பலரும் அனுஷ்காவின் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள். அபூர்வமாக லாரன்சுக்கு அது கிடைத்திருக்கிறது. ஆனாலும் அனுஷ்கா அவருக்கு ஜோடியில்லை. இதனை அதிர்ஷ்டம் என்பதா? துரதிர்ஷ்டம் என்பதா?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.