கோடை விடுமுறையை குறிவைத்து படங்கள் வெளியாவது ஒவ்வொரு வருடமும் சகஜம்தான். ஆனால் இந்த கோடை சம்திங் ஸ்பெஷல். விஜய், சூர்யா என பெரிய நடிகர்களால் களைகட்டியிருக்கிறது.
ஏப்ரல் 2ஆம் தேதி லிங்குசாமியின் பையா வெளியாகிறது. கிளவுட் நைன் இந்தப் படத்தை விநியோகிப்பதால் கலைஞர் தொலைக்காட்சி நிமிடத்துக்கொரு விளம்பரம் செய்து படத்தை பிரமாண்டப்படுத்தி வருகிறது.
இதையடுத்து 9ஆம் தேதி சிம்புதேவனின் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் திரைக்கு வருகிறது. 28 வருடங்களுக்குப் பிறகு தமிழில் உருவாகியிருக்கும் கௌபாய் படம் என்பதால் ஒருமுறை பார்த்து வைப்போம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் தமிழ் மக்கள்.
ஏப்ரல் 14ஆம் தேதி அருண் விஜய்யின் மாஞ்சா வேலு, விஜய்யின் சுறா, சூர்யாவின் சிங்கம் என பல படங்கள் வெளியாக உள்ளன. இதில் சுறாவின் வெளியீடு ஏப்ரல் இறுதிக்கு தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது. திரையரங்கு கிடைப்பதைப் பொறுத்து மற்ற படங்களின் ரிலீஸ் தேதியும் மாறக்கூடும்.
இந்தப் படங்கள் தவிர சுந்தர் சி.யின் குரு சிஷ்யன், மினிமம் பட்ஜெட் சைதை செல்லா, ஷhமின் அகம் புறம் என பல படங்கள் ஏப்ரலை எதிர்நோக்கியுள்ளன.
படங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் குழாயடி நெருக்கமே நினைவு வருகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.